அவள் பேரழகி
அவள் பேரழகி
நிலவொளி வீசும் குளத்தில்
பொன்னொளி சிந்தும் தாமரைகள்
அவள் பாதங்கள்!
தடை போட்ட நெஞ்சை -வாலிபத்து
நடை போட வைக்கும்
அவள் இடை!
அனிச்சம் பூவின் மென்மை ஒப்ப
செங்காந்தள் என
அவள் கைவிரல்!
கார்முகிலைப் போட்டியிடும்
அவள் கருங்கூந்தல்!
மானின் விழியோ?
மருள வைக்கும்
அவள் விழி!
முழு நிலவை தோற்கடிக்கும்
அவள் முகம்!
அவளைக் கண்ட பெண்கள்
வெலவெலப்பர்!
ஆண்களோ
மனதில் சலசலப்பர்!
முழு நிலவு
முகம் மறைக்க
மேகத்தை நாடும்!
நட்சத்திரங்களோ
பொசுக்கென்று மின்னி
விசுக்கென்று அடங்கிப்போகும்
அவள் பேரழகி!!!