ஒரு விசித்திர உடன்கட்டை
எல்லையில் நடந்த போரில்
தாய் நாட்டிற்காய் போரிட்டு
விழுப்புண் அடைகிறான்
மாவீரன் ஒருவன்
இறக்கும் தருவாயில்
அன்பு மனைவி ஞாபகம்
அலையாய் வந்து
நெஞ்சில் பாய
உடலில் மிச்சம் இருந்த
சக்தியெல்லாம் கொண்டு
தான் எப்போதும்
வைத்திருக்கும் கைப்பையை
கடும் முயற்சி கொண்டு
திறந்து கைபுத்தகத்தில்
எழுதுகிறான் ,
"என்னவளே, என் உயிரே
தாய் நாட்டிற்காய் என்
உயிரை காணிக்கையாய்
தந்துவிட்டேன் ; உனக்கு
உனக்காக கொடுக்க
என்னிடம் ஒன்னும் இல்லை
இன்னும் என் அனபைத தவிர
உன்னை எங்க வைத்து செல்லும்
என்னை மன்னிப்பாயா " என்று
அக்கணமே அவன் உயிர் பிரிகிறது
இந்த செய்தி அவளுக்கு செல்ல
மணந்த சில நாட்களிலேயே
மணாளனை இழந்த அவள்
மீளா துக்கம் தாக்க
மூர்ச்சை ஆகிறாள் , பின்னே
சற்றே கண் திறந்து
"அன்பே நீ இலா நான் இல்லை ;
இதோ இந்த உயிரை விட்டு விடுவேன்
ஆனால் அது
உன் உயிரில் கலக்கும் வரை
எனக்காக காத்திருப்பாயா என்று "
கூறி அமைதி ஆனாள்
பறந்து போனது உயிர்
உயிரை நாடி !
புலம்பியபின்னே
இதுவும் ஓர் விசித்திர
உடன்கட்டையோ ?