தவிப்பு

உன் குழந்தை சிரிப்பால்
என் வயதினை வென்றவனே
என்னையும் ஒரு குழந்தையாக்கி
உன் மடியினில் தவழவிட்டவனே....!

முதலில் எனக்கு துணையானாய்
பிறகு என் தோழனானாய்
ஒவ்வொரு வினாடியும் என்
நாடியோடு நரம்பாய் கலந்தவனே....!

உன் மௌனத்தினால் என்
வார்த்தையை வென்றவனே
உன் ஓரப் பார்வையால் என்னை வெட்கத்தால் நெளிய வைத்தவனே..!

உன் பொறுமையினால் என்
வேகத்தை வென்றவளே
உன் மிகுந்த அன்பால் என்னை
இதய கூட்டுக்குள் அடைத்தவனே...!

வானத்தில் இருக்கும் நிலா
பூமியில் உள்ளவர்கள் கண்களுக்கு நெருக்கமாகி,, கரங்களுக்கு தூரமாகிப் போவது போல்- இப்பூமியின் நிலா நீ
என் கண்களுக்கு நெருக்கமாகி கரங்களுக்கு தூரமாக இருக்கிறாய்
என் மனமோ தவிக்கிறது உயிரே...!

எழுதியவர் : சி.பிருந்தா (3-Oct-16, 10:38 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : thavippu
பார்வை : 463

மேலே