அவள்

புது வெள்ளை மழை பொழிகிறது
அவள் தண்ணீர் தெளிக்கிறாள் ...

வானவில் தரை இறங்கியது
அவள் கோலம் போடுகிறாள் ...

நட்சத்திரங்கள் மாடத்தில் குடி கொண்டது
அவள் விளக்கேற்றுகிறாள் ....

ஆண்டாள் மறு அவதாரம் எடுக்கிறாள்
அவள் திருப்பாவை பாடுகிறாள் ....

நான் மெய் மறந்து போகிறேன்
அவள் எனை கடந்து போகிறாள் ....

எழுதியவர் : கிரிஜா.தி (3-Oct-16, 12:22 pm)
Tanglish : aval
பார்வை : 292

மேலே