நான்
நான்
நெறிதவறா வாழும்
தர்மனுமல்ல
சந்தேகம் எழும்
ராமனுமல்ல
திறமைகள் நிறைந்த
ராவணனுமல்ல
தந்திரம் நிறைந்த
சகுணியுமல்ல
காதல் கொள்ளும்
கண்ணணுமல்ல
காமம் கொள்ளும்
கோவலனுமல்ல
நட்பு தவறா
கர்ணணணுமல்ல
கேட்டு தராத
பாரியுமல்ல
சாந்தம் காட்டும்
இயேசுவுமல்ல
வீரம் காட்டும்
பீமனுமல்ல
ஆசைகள் துறந்த
புத்தனுமல்ல
அறிவுரைகள் துதிக்க
நபியுமல்ல
நான் என்றும் நானவேன்....