சுண்டி இழுத்த உன் பார்வை 555

அழகே...

உன்னிடம் கிடைக்காது என்று தெரிந்தும்
உன்னிடம் ஒன்றுகேட்கிறேன்...

நான் உன்னிடம் கேட்பது
காதலோ உன் இதயமுமோ இல்லை...

நான் கேட்பதெல்லாம்
உன் விழிகள்தான்...

என்னை உன் விழிகள் தெரிந்தோ
தெரியாமலோ பார்த்திருக்கிறது...

உன் விழிகளின் பார்வையை
என் இதயம் பார்த்து இருக்கிறது...

நீ பார்த்த அந்த பார்வையை
திருப்பி கொடுத்துவிடடி என்னிடமே...

சுண்டி இழுத்த உன் பார்வை அதில்
சுருண்டு விழுந்தது என் இதயம்...

வினாடி பார்வை மீண்டும்
என்னிடம் கொடுத்துவிடு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Oct-16, 8:12 pm)
பார்வை : 1248

மேலே