கழுத்தை நெரிக்கும் அளவிற்கு கடன் பொருளாதாரத்தில் ஊசலாடும் 10 நாடுகள்
உலகளாவிய பொருளாதாரச் சூழல்நிலை பங்குச் சந்தை சரிவு, பணவாட்டம், கடன், தீவிரவாதம், இயற்கை சீற்றம் என பல காரணிகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்து வருகிறது.
இத்தகைய சூழல்நிலையில், உலக நாடுகள் தங்களது நாட்டு வளர்ச்சிக்காக பெறும் கடன் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
கடன் சுமையைக் குறித்து ஒவ்வொரு நாடும் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையிலும், உலக நாடுகள் உலகளாவிய உறுதியற்ற நிதி தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இதனை சமாளிக்க, அரசாங்கங்களுக்கு வரியை உயர்த்துவதும் மட்டுமே சாத்தியமாக கூறுகிறது.
இப்படி மிகப்பெரிய கடனில் தத்தளிக்கும் ஜப்பான் நாட்டையும், அதிக கடன் வாங்கி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாடுகளையும், திவாலாக காத்துகிடக்கும் நாடுகளையும் பார்போம். இப்பட்டியலில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.
வளரும் நாடுகள்
சீனாவின் பொருளாதார மந்த நிலை மற்றும், கிரீஸ் நாட்டின் கடுமையான கடன் நெருக்கடி போன்றவை வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நெருக்கடி பற்றிய அபாய மணியை அடிக்கின்றன. ஏனெனில் வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை என்பது எப்பொழுது வேண்டுமானாலும், எந்தவித முன்னறிவிப்பின்றி வரலாம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி -
ஜிடிபி இந்நிலையில்அரசாங்கக் கடனுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் அடிப்படையில், அதிகக் கடனில் தத்தளிக்கும் உலக நாடுகளை நாங்கள் இங்கே பட்டியலிடுகின்றோம். இங்கே அந்தப் பட்டியலில் உள்ள முதல் 10 நாடுகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அமெரிக்கா
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
104.5 சதவீதம்.
அமெரிக்க அரசாங்க பொறுப்பு அலுவலகத்தின் கணக்கின்படி, அமெரிக்காவின் நிகரச் சொத்து மதிப்பு 3.2 டிரில்லியன் டாலர் ஆகும். அவ்வாறு இருந்த போதிலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் பெயர் வருகின்றது.
ஏனெனில் சமீபத்திய மத்திய அரசின் கணக்கீட்டின் படி அமெரிக்காவின் மொத்தக் கடன் சுமார் 19 டிரில்லியன் என்கிற அளவில் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அதோடு நாட்டின் செலவுகளும் அதிகரித்து வருகின்றன.
முக்கியமாகப் பாதுகாப்புச் செலவுகள், சமூகப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் சுகாதாரத் திட்டங்கள் போன்றவற்றில் அமெரிக்கா அதிக அளவில் செலவழித்து வருவதால் அதனுடைய கடன்களும் அதிகரித்து வருகின்றன.
பூட்டான்
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
110.7 சதவீதம்.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்ட போதும், இந்த நாட்டின் அதிகரித்து வரும் கடன் அளவுகள், இந்த நாடு மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்காது என நாம் நம்புவோம். வெளிநாடுகளில் இருந்து பூட்டானுக்கு வரும் நிதி உதவி அதிகரிப்பதால், பூட்டான் மிக விரைவாகக் கடன் நெருக்கடி நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்தக் கடன்களின் பெரும் பகுதி இங்குக் கட்டப்பட்டு வரும் நீர் மின் நிலைய திட்டங்களுக்குச் செல்கின்றது. இந்தக் கட்டுமான திட்டங்கள் முடிக்கப்பட்டால் அந்த நாடு ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்படுகின்றது.
சைப்ரஸ்
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
112.0 சதவீதம்.
ஏராளமான தொல்லியல் செல்வம் உள்ள நாடான சைப்ரஸ் இன்று உலகின் மிகவும் கடன்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாகும். வங்கி வைப்பு நிதி மற்றும் அந்நிய நாடுகளில் இருந்து வாங்கிய கடன்களின் காரணமாக, சைப்ரஸ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நேர்மறையான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
எனினும், 2012 ல் கிரேக்கத்தில் நடைபெற்ற அரசாங்கக் கடன் மறு சீரமைப்பானது, சைப்ரஸ்ஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதித்தது. சைப்ரஸ் நாட்டின் மீட்பு நடவடிக்கை இன்னும் தொடர்கின்றது.
அயர்லாந்து
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
122.8 சதவீதம்.
அயர்லாந்து நாட்டின் மொத்த கடன் அளவு உண்மையில் மிகவும் அதிகம். ஆகவே அயர்லாந்து இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஐரிஷ் டைம்ஸ் படி, அயர்லாந்து நாட்டின் மொத்த தேசிய கடன் அளவு, தற்போது 203.2 பில்லியன் யூரோ என்கிற அளவில் உள்ளது. நிலைமை இவ்வாறு மோசமாக இருந்தாலும், அயர்லாந்து தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டே இருக்கின்றது.
அதன் காரணமாக அதன் செலவுகள், மற்றும் வாங்கிய கடனுக்கான வட்டி போன்றவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
போர்ச்சுகல்
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
128.8 சதவீதம்.
கிரீஸ் நாடு கடுமையான நிதி சரிவை சந்தித்த பிறகு, போர்ச்சுக்கல், ஐரோப்பாவில் கடன் நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
தொடர்ந்து வாங்கி வரும் கடன்களின் காரணமாக இந்த நாடு தாங்க முடியாத கடன் சுமையால் தத்தளித்து வருகின்றது. இது இந்த நாட்டின் நிதி நிலைமை பற்றிய கவலைகளை அதிகரிக்கச் செய்கின்றது.
சமீப காலங்களில் இந்த நாட்டின் பொருளாதாரம் சற்றே முன்னேறிச் சென்றாலும், அங்கே நிலவும் மோசமான பணக் கொள்கையின் காரணமாக, இந்த நாடு கடன் பொறியில் சிக்கித் தவிக்கின்றது.
இத்தாலி
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
132.5 சதவீதம்.
இத்தாலிய வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்பில், கடனின் அளவு அதிகரித்திருப்பது, இத்தாலியின் பொருளாதாரம் நல்ல நிலைமையில் இருப்பதைக் கண்டிப்பாகக் குறிப்பிடவில்லை.
இந்த ஆண்டின் முற்பகுதியில், நாட்டின் முக்கிய வங்கிகளின் பங்குகள் சரிந்தது. அது நிதிச் சுமையை மேலும் கவலைக்குள்ளாக்கியது. வங்கித் துறையில் கட்டமைப்புக் குறைபாடுகள் காரணமாகக் குவிந்து வரும் இழப்புகள் காரணமாக, மிகவும் குறைவான விகிதத்தில் அரசாங்க பத்திரங்களை விற்பது ஒன்றே தற்பொழுது இத்தாலிக்கு இருக்கும் ஒரே ஒரு வழி.
ஜமைக்கா
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
138.9 சதவீதம்.
ஜமைக்காவின் புதிய பிரதமராக ஆண்ட்ரூ ஹொல்னெஸ் நியமிக்கப்பட்டார். இது அந்த நாடு கடனை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்பதைக் குறிக்கும் ஒரு சமிக்கையாகப் பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும் கடன்களைத் தீர்க்க இந்த நாடு கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனினும் கடன் பிரச்சனைகளை ஒரே இரவில் தீர்க்க முடியாது என்பது வெளிப்படை.
லெபனான்
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
139.7 சதவீதம்.
குப்பை குவியலுக்கு எதிரான மக்களின் வன்முறை எதிர்ப்பின் காரணமாக, லெபனான், கடந்த ஆண்டுத் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது.
எனினும், கடன் சுமையால் தத்தளிக்கும் 'தோல்வியுற்ற நாடான' லெபனானின் மிக முக்கியப் பிரச்சனை என்பது அதன் கடனை செலுத்த இயலாமை ஆகும். சிரியாவில் நிலவும் பிரச்சனைகள், அரசியல் ரீதியாக லெபனானிற்கு நெருக்கடிகளை அதிகரித்து அதை இன்னும் ஒரு மோசமான நிலைக்குக் கொண்டு சென்று விட்டது.
கிரீஸ்
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
173.8 சதவீதம்.
அதிகரித்து வரும் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் காரணமாக 2010 ம் ஆண்டில் கிரீஸில் பத்திர சந்தைகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நாட்டின் மொத்தக் கடன் தொகை 320 பில்லியன் யூரோ என்கிற அளவை அடைந்தது மற்றும் கிரீஸின் பொருளாதாரம் கிட்டத்தட்ட நின்றுபோனது. அதன் காரணமாகக் கிரீஸ் உலகின் கவனத்தை ஈர்த்தது.
ஜப்பான்
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
243.2 சதவீதம்.
ஜப்பானின் வேலையின்மை சதவீதம் மிகவும் குறைந்த நிலைக்கு வந்து விட்டது. மேலும் அங்கு வெட்டியாக ஒருவரும் இல்லை என்கிற நிலை நிலவுகின்றது.
ஆயினும் ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் பற்றாக்குறை நிலவுகின்றது. செலவினங்களைக் குறைத்து அதிக வரி விதிப்பது மட்டுமே தற்போதைக்கு ஜப்பான் அரசுக்கு உள்ள ஒரே வழி.