ஓடும் மேகங்களுடன் ஒரு சந்திப்பு…

மேகநாதன் மரத்தின் கீழிருந்து வானத்தைப் அண்ணாந்து பார்த்தபடியே இருந்தான். மேகங்களின் விதம் விதமான தோற்றங்களும் நிறங்களும் அவனுக்குப் புரியாத புதிராக இருந்தது. சில நாட்களுக்கு முன் மஹாகவி காளிதாசனின் மேகம்விடும் தூதைப் படித்து இரசித்தவன் அவன். செல்வத்துக்கு அதிபதியான குபேரன், தனது ஊழியனான யக்ஸா என்பவனைக் கடமை தவறியதற்காக கைலாச மலையில் வாழும் அவன் மனைவியிடம் இருந்த பிரிந்து, வெகு தூரத்திலிருக்கும் மலைத் தொடருக்கு நாடு கடத்தினான். மனைவியின் பிரிவு தாங்காத யக்ஸா வானத்தில் கைலாச மலையிருக்கும் திசையை நோக்கிச் செல்லும் மேகங்களிடம் தன் நிலையை விளக்கி தூது அனுப்பியதாக “மேகதூது” கவிதைகளில் கூறப்பட்டுள்ளது. அதில் மேகங்களுக்கு எவ்வளவுக்கு ஒரு பொறுப்பான வேலையைச் செய்ய அக்கவிஞன் கொடுத்திருந்தான். அந்த கற்பனைத்திறனை நினைத்துப் பார்க்கவே மேகநாதனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

மேகங்கள், வானத்தில் பறக்கும் வாத்துக்கள், பறவைகள் , ஓடும் நதிகள், மலர்களுக்கிடையே தாவும் வண்டியினங்கள் , வண்ணாத்திப்பூச்சிகள் இவையெல்லாம் தகவல்களை எடுத்துச் செல்லும் தபாற்கார கதாப்பாத்திரங்களாக பல கவிஞர்கள் கற்பனையில் படைத்திருக்கிறார்கள். ஈழத்தில் நடந்த அழிவுகளை அரசு ஊடகங்களில் இருட்டடிப்பு செய்த வேளையில், யார் தான் நடந்த உண்மைகளை பிறநாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்? சிந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். ஈழத்தின் வானத்தில் சுதந்திரமாக பறந்து செல்லும் சைபீரிய வாத்துக் கூட்டத்தைக் கண்டார். அவர்களை நடந்த அழிவுகளை உலகுக்க எடுத்தச் செல்லும் தகவற்காரர்களாக அவ்வாத்துக்களை கற்பனையில் சிருஷ்டித்து கவிதை வடித்தார். புறாக்கள் தகவல்களை எடுத்துச் செல்வதை கேள்விப்பட்டருக்கிறான் ஆனால் இங்கோ மேகங்களும் கூட அத்தொழிலைச் செய்வதாக கவிஞர்கள் கவிதை புனைந்தது இயற்கையின் ஒவ்வொரு செயல்பபாட்டையும் இரசித்திருக்கிறார்கள். கவிஞரின் கற்பனைத் திறனைச் சிந்தித்து தனக்குள் சிரித்தான் மேகநாதன்.

“என்ன தம்பி சிரிக்கிறாய். எனக்கும் கொஞ்சம் சொல்லிச் சிரியேன்.”

குரல் கேட்டு சுற்றும்முற்றும் பார்த்தான் அவன். ஒருவரையும் காணவில்லை. ஒரு வேளை பிரமையோ.

“என்ன தம்பி தேடுகிறாய்?. அண்ணாந்து பார். நான் தான் சில நிமிடங்களுக்கு முன் ஒரு மிருகம் போன்ற உருவத்தில் தோற்றமளித்தவன் என்னைப்பார்த்த இரசித்தாயே ஞாபகமிருக்கிறதா”?

“ஓ நீ தான் அந்த மேகமா. இப்ப என்ன திடீரென்று வேறு உருவத்தில் தோற்றமளிக்கிறாய்”?

“நான் என் பயணத்தை தொடரும் போது, உரு மாறிக்கொண்டே போவேன். ஏன் உலகில் மனிதர்களின் குணம் மாறுவதில்லையா? அரசியல்வாதிகள் கட்சி மாறுவதில்லையா? உலகில் எதுவும் நிரந்ததரமற்றது என்பதை மானிடருக்கு விளக்கத்தான் இந்த உருமாற்றம்;.”.

“ அது சரி நீ எப்படி உருவாகிறாய்.?”

“; காற்றும், மிக சிறிய தண்ணீத்; துளிகளும் கலந்ததினால் நாங்கள் உருவாகிறோம். ஒளிக் கதிர்களை, நாம் கிரகிக்காமல் ஊடுறுவிச் செல்ல அனுமதிக்கிறோம். நேரத்துக்கு ஏற்ப பெண்கள் சேலை மாற்றிக் கொள்வது போல நிறத்தை மாற்றிக் கொள்கிறோம். பெரும்பாலும் வெள்ளை நிறத்தோடு காட்சி தருவோம். சூரிய கதிர்களில் இருந்து வரும் ஒளி, வானத்தின் வெளிர் நிறத்தோடு சேர்ந்தால் கிடைப்பது வெள்ளை நிறமே. மாலை நேரங்களிலும், அதிக வெளிச்சம் ;உள்ள நகரங்கள் மேலேயும் வெள்ளை மேகங்களைக் காணமுடியாது. பகல் நேரத்தில் மேகங்கள் அதிகமாக வெள்ளை நிறத்தில் காட்;சி தரும். வேதிப் பொருட்களைத் தூவி, மழை மேகங்களை மழை பெய்ய செய்வதை “மேக விதைப்பு” என்பர்”;.

“அடேயப்பா, நீ விஷயம் அறிந்தவன் போல் பேசுகிறாயே?”.

“ இன்னும் எங்களைப் பற்றி சொல்கிறேன் கேள். மேகங்களை உயர் மேகங்கள்; . மதிய மேகங்கள், குறைந்த உயரத்தில உள்ள மேகங்கள் என்று வகுத்துள்ளாகள். பூமியில் இருந்து எவ்வளவு உயரத்தில இருக்கிறோமோ அதற்கு ஏற்ப வகுத்துள்ளனர். “சைரஸ (Cirus) என்ற உயர் மேகங்கள் 18,000 அடிகளுக்கு மேலான உயரத்தில் இருப்பவை. 6500 முதல் 18,000 அடி உயரத்தில் உள்ள அல்டோகியூமலஸ் (Altocumulus) மேகங்கள் மத்திய மேகங்களாகும். அல்டோ என்பது உயரத்தைக் குறிக்கும் லத்தீன் சொல். கியுமலஸ் எனபது குவியலாகும். உயரத்த்தில் குவிந்திருப்பதால் அப்பெயர் வந்திருக்கலாம் புத்து அடிப்படை மேகங்களில் இதுவும் ஒன்று. 6000 அடி உயரத்தில் உள்ள ஸ்டாராடஸ் (Stratus) போன்றவை கீழ மேகங்களாகும். ஸ்டாராடஸ் அடுக்கினை குறிக்கும் லத்தீன் சொல். சிலசமையங்களில் தூறலையும, பனியையும் கொடுக்க வல்லது. உங்களைப் போல் எங்களுக்கும் ஒவ்வொரு பெயர்களுண்டு”.

“அது சரி, மேலே இருந்து கொண்டு கீழே என்ன நடக்கிறது என்று விடுப்பு பார்கிறாயா?

“மேலிருந்தபடி பூமியில் மானிடர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். சில இடங்களில் கர்வம் கூடி அதர்மம் தோன்றினால் அங்கு வாழ்பவர்களுக்குத் தண்டனையும் கொடுக்கிறேன்.”

“நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை. வானத்தில் அவ்வளவு உயரத்திலிருக்கும் நீ எப்படி எங்களுக்குத் தண்டனை கொடுக்க முடியும்?”

“இது தெரியாதா உனக்கு. சில ஊர்களில் பொய்யும் புரட்டும் அநீதியும் அதிகமாகி தண்ணீர் இல்லாமல் அயல்பிரதேசத்திடம் கை ஏந்தி நிற்கும் அளவுக்கு வரட்சி ஏற்படுகிறதே அது தெரியவில்லையா உனக்கு?

“ தெரிகிறது, தெரிகிறது.”

“அந்த நிலையை உருவாக்குவதே நாங்கள் தான். என் சகோதரர்களான மழையைப் பொழியும் கரு மேகங்களை அந்த ஊர் பக்கமே போகவிடமாட்டேன். அப்படிப்பட்டு போனால் அவர்களும் அக்கூட்டத்துடன் சேர்ந்து தீயவர்களாகி விடுவார்கள். அட்டூழியம் அளவுக்கு மீறனால் வுழசயெனழ எனப்படும் சுழல் காற்றை உருவாக்கும் எனது மூத்த சகோதரனை அனுப்புவேன். அவன் பொல்லாதவன் ”.

“ மேகங்களில் பொல்லாத மேகங்களும் உண்டா?”

“ஏன் இல்லை? மனிதர்களில் நல்லவர்களும் தீயவர்களும் இருக்கிறதைப்போல் எம்மிலும் உண்டு.”

“ யார் அவர்கள்?

“புனல் மேகங்கள் (புனல் Clouds , மமட்டஸ் மேகங்கள் (மாட்ஸ் சலூட்ஸ்);, அஸ்பராத்து (சைபேரட்ஸ்)) மேகங்கள் , மதர்ஷிப் (மதர் shipp) மேகங்கள், தட்டு மேகங்கள் (ShelfCloudsளூநடக ஊடழரனள , வோல் மேகங்கள் (Wallclouds) ஆகியவற்றை குறிப்பிடலாம். இதில் புனல் மேகங்கள் பூமியை வந்தடையும் போது சுழிகாற்றாகிறது ( Tornado). மதர்ஷிப் மேகங்கள் அபாயகரமானது சுழிகாற்றை உருவாக்கக் கூடியது.”

“ஓ. இப்ப விளங்குகிறது எப்படி நீ பூமியில் நடக்கும் அட்டூழியங்களுக்கு தண்டனை கொடுக்கிறாயென்று. நீ கடவுளைப் போல் என்று சொல்.”

“சக்தி தான் இயற்கை. இயற்கைதான் தான் கடவுள். நான் இயற்கையில் ஒரு அங்கம். கடவுளின் சக்தியை நீ அறிவாய். அதுபோன்று என் சக்தியையும் உனக்குத் தெரியும். மிக சக்தி வாய்ந்த மின்னலைக் கூட உருவாக்குவோம். எமக்குள் உள்ள சக்தியினையறிந்து கிரேக்கர்கள் எங்களைத் தெய்வங்களாக வணங்கினார்கள் என்பது உனக்கு தெரியுமா?”

“கேள்விப்பட்டிருக்கிறேன். இது சரி நீ உல்லாசமாக பவனி வரும் வானம் ஏன் எப்போதும் நீலநிறமாகயிருக்கிறது?. அந்த நிறத்தைப் பார்த்து எனக்கு அலுத்துப் போய்விட்டது. “

“வெள்ளை நிற ஒளியானது வானவில்லில் உள்ள எல்லா நிறக்கதிர்களையும் உள்ளடக்கியுள்ளது. ஒளியின் தெறிப்பு அதன் நிறத்தில் தங்கியுள்ளது. ஒளியானது அலை போன்றது. ஒரு அலையின் அடுத்தடுத்துள்ள குன்றுச்சிகளுக்கிடையே உள்ள தூரத்தை அலை நீளம் என்பர். சிவப்பு நிற ஒளிக்கு மிக நீண்ட அலை நீளமுண்டு. நீல நிற ஒளியின் அலை நீளம் சிவப்பு நிற ஒளியின் அலை நீளத்திலும் பார்க்க கிட்டத்தட்ட அரைமடங்கு குறைவு. இந்த அலை நீள வித்தியாசத்தால் நில நிற ஒளியானது சிவப்பு நிற ஒளியிலும் பத்து மடங்கு கூடுதலாக சிதறக்கூடியது. ஊதா நிறம் நீல நிறத்திலும் பார்க்க கூடியளவு சிதறக் கூடியது ஆனால் ஊதா நிறத்தை மனிதர்களின் கண்கள் உணர்வது குறைவு. இக்காரணத்தாலேயே வானம் நீலநிறமாக காட்சி தருகிறது. அதில் பல நிறங்களில் நாங்கள் தவழ்ந்து விளையாடுகிறோம்.”

“நீ ஒரு பௌதிக ஆசிரியரைப் போல் அல்லவா விளக்கம் கொடுக்கிறாய், அதற்கு நன்றி. உனக்குச் சகோதரர்கள் இல்லையா?”

“ஏன் இல்லை. பலர் இருக்கிறார்;கள்.”

“அவர்களுக்குப் பெயர்களுண்டா?”

“ உண்டு. ஆங்கிலத்தில் மேகங்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள் இலத்தீன் மொழியை அடிப்படையாக கொண்டதாகும். பெயர்கள் தோன்றுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் லூக் ஹவார்ட் (Luke Howard) என்ற ஆங்கிலேயர். இவரால் 1802-1803 இல் மேகங்களைப்பற்றிய அறிக்கையை அடிப்படையாக வைத்து பெயர்கள் சூட்டப்பட்டன.”

“மேகங்கள் பூமிக்கு கீழே இறங்கி வரும் போது மூடுபனி (Fog) தோன்றுகிறது எனக் கேள்விப்பட்டேன. உண்மையா”?

“ஏன் மூடுபனி பற்றி கேட்கிறாய்“?

“மூடுபனியில் கார் ஓட்டுவது ஆபத்தானது. பல விபத்துகள் நடந்துள்ளன. அது தான் கேட்டேன்”.

“எந்த ஒரு மேகமும் பூமியைத் தொடும் போது மூடுபனி தோன்றுகிறது. அனேகமாக தாழந்த இடங்களில் இவை தோன்றும். மூடுபனியில் 1 கிமீ தூரத்துக்;கு மேல் பார்க்க முடியாது. ஆனால் (Mist) என்ற மறைபனியில் 2 கிமீ வரையான தூரத்துக்குப் பார்க்கலாம். இதுதண்ணீர் துளிகலால் உருவாகிறது. விரைவில் காற்றாலும், வெப்ப உயர்வதாலும் மறையக் கூடியது”.

“உன் சகோதரர்களை எனக்கு அறிமுகப்படுத்த முடியுமா?”

“சைரஸ் (Cirus) என்பவன் அதோ வெகுஉயரத்தில் இருக்கிறான். பனிக் கட்டியினால் ஆன படிகங்களைக் கொண்டவன் அவன். சிரோஸ்ரேடஸ் (Cirrostratus) என்பவன் பனிக் கட்டியினால் ஆன பால் விரிப்பினைக் கொண்டவன். அதோ வெகு தூரத்தில் நிற்கிறான் தெரிகிறதா. இவனை சூரியனைச் சுற்றியும் சந்திரனைச் சுற்றியும்; வளையமாகக் காணலாம். அடுத்தது சைரோகியூமிலஸ் என்பவன். இவளை நீ சந்திப்பது அபூர்வம். கொஞ்சம் கூச்சமுள்ளவள். இவர்களை வெகுஉயரத்தில் தான் காணலாம்.
“ அது சரி உன்பெயரைச் சொல்லவில்லையே”.

“தாழ்ந்த உயரத்தில் தவழும் எனது பெயர் கியூமிலஸ் (Cumlus ). சுமார் 3300 ஆடி உயரத்தில் இருப்பவன்“.

“ உன்றை பெயரில் பல பெயர்கள் கொண்ட மேகங்கள் இருப்பதாக கேள்விப்பட்டேனே.”

“ இது என்ன அதிசயம். உங்களில் பெரியதம்பி, சினத்தம்பி, முருகுதம்பி, வேலுத்தம்பி, செல்லத்தம்பி என்று இல்லையா?

“கோசுப்பூவைப் ( Cauli Flower) போல் வெள்ளை நிறமாய்; பார்க்க அழகாகயிருக்கிறாய்.”

“என் அழகைப் பற்றி சொன்னதுக்கு நன்றி. நான் சாதரண வானிலையின் போது வானில் உலாவுவேன். ஸ்ராடா கியூமஸ் என்ற என் சகோதரன் அனேமாக சூரிய ஒளி பூமியை அடையாமல் தன் தடித்த வெள்ளை நிறப் போர்வையால் மறைக்கும் சுபாவம் உள்ளவன். ஸ்ராடாஸ் என்பவன் நிலமட்டத்திலிருந்து கொஞ்ச உயரத்தில் வாழ்பவன். மூடுபனியென்றும் அவனை அழைப்பர். காற்றினாhல் மூடுபனி சற்று உயரத்துக்கு தள்ளப்பட்டு ஸ்ராடஸாக மாற்றமடைகிறது.”

“அது சரி கருப்பு நிற சகோதரர்கள் இருக்கிறார்களே அவர்களைப்பற்றி நீ கூறவில்லையே”

“நிம்போ ஸ்ரேடஸ் என்பவன் பயங்கரமாக கண்ணீர் விடுபவன் அவனை மழை மேகம் அல்லது கார்முகில் என்பர். விவசாயிகள் அவனைக் கண்டதும் குதுகாலம் அடைவர். வானை மூடி, சூரிய வெளிச்சம் பூமியை அடையாமல் தடுத்து மழை பொழிபவன் அவன். இவனைப் போல் கியூமோலொனிபஸ் என்பவனும் மின்னல் இடியுடன் மழையைப் பொழிபவன்.”

“அடேயப்பா இவ்வளவு சகோதரர்களா உனக்கு? உச்சரிக்க கடினமான பெயர்களாக இருக்கிறதே. அது சரி உன் தோற்றத்தைப் பற்றி சற்று விளக்கமாய் சொல்ல முடியுமா?”

“பண்டைய கிரேக்கர்கள் இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காற்று , தென்றல் , சூர்pய உதயம், வானவில் , இரவு, புயல் ஆகியவற்றிற்கு பெயர்கள் வைத்து கடவுளாக வணங்கினர். அதில் ந்தே எமது பெயர்களும் கிரேக்க பெயர்களான அமைந்துள்ளன.”

“ தொற்றத்தைப் பற்றி சொல்லவில்லையே”?

“பூமியிலும், சமுத்திரங்களிலும் உள்ள நீர் சூரிய வெளிச்சத்தில் ஆவியாக மாறி காற்றினால் மேலே எழும்பிய பின் குளிர்ந்து சிறு நீர்த் துளிகளாக மாறுகிறது. இதே மேகங்கள் என அழைக்கப்படும் நாங்கள் உருவாகும் இரகசியமாகும். பூமிக்கு அருகில் இருக்கும் போது மூடுபனி என்பார்கள். இந்த நீர் துளிகள் ஒன்று சேர்ந்து உங்களுக்கு மழையாக பொழிகிறோம். வெப்ப நிலை மிகக் குறைந்தால் சிறு நீர்த்துளிகள் உறைந்து பனிக்கட்டியாகவும் (Snow) சில வேலை ஆலங்கட்டியாகவும் (Hail) பூமியில் விழுகிறது.”

“உனது சகோதரர்கள் ஏன் இப்படி அவசரம் அவசரமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு “ஓடும் மேகங்களே ஒரு சொற்கேளீரோ…” என்ற கண்ணதாசனின் சினிமா பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.”

“காற்றே மேகங்கள் பயணம் செய்ய உதவுகிறது. சில சமயங்களில் மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்வோம்;. இடிமின்னலின் போது மணிக்கு 30 முதல் 40 வேகத்தில் செல்வோம்”;

“ மனிதர்கள் மற்றவர்களைப் பார்த்து கவிதை புனைவதிலும் பெயர் வைப்பதிலையும் கெட்டிக்காரார்கள். கார்மேகம் . மேகநாதன், முகிலினி, மேகவண்ணன், இப்படி எங்கள் பெயர்களையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். எங்களை அங்கம் அங்கமாக இரசித்து கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். கருமுகில் போன்ற கூந்தல் எனப் பெண்களை வர்ணித்திருக்கிறார்கள். உயர்ந்த மலை உச்சியில் நாம் சற்று இளப்பாறுவதைக் கவனித்துவிட்டு அதோ பார் முகிலினி என்ற பெண் மலையைத் தழுவி முத்தமிடுவதை என்று கற்பனை செய்து எங்கள் கற்புக்கு களங்கம் விளைவித்திருக்கிறார்கள். நல்லகாலம் சுழல்காற்றின் போது தோன்றும் கூம்பு வடிவமான மேகங்களைப் பார்த்து பெண்ணின் பின்னலுக்கு ஒப்பிடவில்லை ”

“ பார்த்தாயா மனிதனின் கற்பனைத் திறனை. நீ மட்டும் வானில் சஞ்கரிக்க முடியும் என நினைக்காதே. மனிதர்களால் கூட கற்பனை உலகில் சஞ்சரிக்க முடியும் . இயற்கையின் அழகை எவ்வளவுக்கு அங்கம் அங்கமாக இரசிக்கிறார்கள் பார்த்தாயா?. பெயர்களைப்பற்றி சொன்னாயே அது உண்மை. என்பெயர் கூட மேகநாதன். அது தெரியுமா உனக்கு“

“பார்த்தாயா மேகநாதா . நீ எங்களில் ஒருவனாகிவிட்டாய். எங்கள் சக்தியை உலகுக்கு எடுத்துச் சொல். எங்களை அசுத்தபடுத்த வேண்டாமெனச் சொல். பத்தாண்டுகளுக்கு முன் மத்திய கிழக்கில் நடந்த யுத்தத்தின் போது எண்ணைக்கிணறுகள் எரிந்தன. அதில் இருந்து மேலே கிளம்பிய புகை எங்களை அசுத்தப்படுத்திவிட்டது. பல தேசங்களுக்கு அந்த அசுத்தத்தை எடுத்துச் செல்ல வேண்டி ஏற்பட்டது. நாம் சில இடங்களில் பொழியும் அமிலம் கலந்த மழை, மனிதர்கள் குளம் குட்டை நதி போன்றவற்றை அசுத்தப்படுத்துவதாலேயே ஏற்படுகிறது. அதற்கு நாம் பொறுப்பில்லை. அமேசன் காடுகளில் உள்ள உயர்ந்த மரங்களால் நாம் அப்புகுதிக்கு ஒரு காலத்தில் வேண்டிய மழையைக் கொடுத்தோம். இப்போது பொல்லாத மனிதர்கள் காடுகளை அழித்ததன் மூலம் அப்பகுதிக்கு மழை பெய்வது குறைந்து விட்டது. காடுகளுக்கு நெருப்பு வைப்பதும் எமக்குப் பாதகமாக அமைகிறது. இக்காரணங்களால் மழை குறைந்து மின்சார உற்பத்தி குறைகிறது. இது தெரியாமல் அரசியல் வாதிகள் எம்மேலும் கடவுள் மேலும் பழியைப் போடுகிறார்கள்.”

“ சரி என்னால் முடிந்தமட்டும் அரசியல் வாதிகளுக்கும் மக்களுக்கும் எடுத்துச் சொல்லுகிறேன். ஆனால் அந்த கரும் முகில்களை இருக்கிறதே அதைக் கண்டால் எனக்குப் பயம். “

“ஏன் பயம்?”

“அவை சுழிகாற்றையும் மின்லையும் தரக்கூடியவை.”

“கியூமோலொனிபஸ் (Cumulonimbus ) என்ற என் சகோதரன் தான் நீ சொல்லும் மின்னலையும் இடியையும் உருவாக்கிறவன். அவன் தன் கடமையை உலகுக்கு செய்கிறான். அவன் கண்ணீர் விடாவிட்டால் உங்கள் பூமியில் உள்ள குளம், ஆறு , குட்டை எல்லாம் வற்றி விடும். பிறகு “தண்ணீர் தண்ணிர்;” சினிமா படம் போல் ஆகிவிடும். அல்லது கர்நாடகாவிடம் தண்ணீருக்கு பல் கெஞ்சவேண்டி வரும்.”

“அடடா. உனக்கு அந்தச் சினிமாப் படம் பற்றிக் கூடத் தெரியுமா. அரசியல் கூட பேசுகிறாயே?”

“ஏன் தெரியாது “மூடுபனி “ என்ற படப் பெயர்கள் கூட வைத்திருக்கிறார்கள். நான் தான் சொன்னேனே மேலேயிருந்து கீழே நடக்கும் உங்கள் திருக்கூத்துக்களை அவதானிக்கிறேன் என்று. சினிமா எடுக்கிறவன் இந்து கடவுள்மாரை எங்கள் மேல் நடந்து செல்வது போல் படம் பிடித்து மக்களை நம்பவைக்கிறார்கள். காதல் ஜோடிகள் கூட மேகங்களுக்குள் ஓடி பிடித்து விளையாடி பாட்டுபாடுவதாக காட்டுகிறார்கள். நான் அப்படி ஒருவரையும் என் மேல் நடந்து செல்லும் போது சந்திக்கவில்லை. அது மட்டுமா ஒரு படத்தில் சோக காட்சி வந்தவுடன் வானத்தில் எனது சகோதரன் மழையெனும் கண்ணீர் விடும் போது அவனை படம்பிடித்து காட்டி சோகத்தை இரசிகர்களுக்கு வெளியிடுகிறான் சினிமாக்காரன். இடி மின்னல் சுழல் காற்று திரண்டு வரும் மேகங்கள் கூட அவனின் பார்வையிலிருந்து தப்பவில்லை. சினிமாக்காரன் பணம் சம்பாதிக்கிறான் எங்களை மக்களுக்கு காட்டி. அவனுக்குப் போய் சொல்லு இக்காட்சிகளுக்கு அவனிடம் இனி கட்டணம் வசூலிக்கப் போகிறேன் என்று”.

“அப்படி சொல்லாதே. பணம் பெறாது உன்னை உலகுக்கு விளம்பரம் செய்கிறார்கள் அவர்கள். அப்படி யோசித்துப் பார். அதுக்கு நன்றியாக இரு. இயற்கை எல்லோருக்கும் சொந்தமான சொத்து”.

‘சரி சரி நான் செய்ய வேண்டிய கருமங்கள் பல இருக்கு. நான் கிளம்புகிறேன். அதற்கு முன் உன்னிடம் ஒரு கடைசிக் கேள்வி. பூமியைப் போல் மற்றைய கிரகங்களிலும் மேகங்கள் உண்டா”.

“ ஏன் இல்லை. மேகங்கள் தண்ணீர் இருந்தால தான் உருவாகலாம் என்பதில்லை. வியாழக் கிரகத்தில் உள்ள மேகங்கள், அமோனியாவும் மீதேனும் கலந்தது, ஏன் சனி கிரகத்தில் கூட மேகங்கள் உண்டு. சனி கிரகத்துக்கு 62 சந்திரன்கள் உண்டு. இதுவே சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கிரகம். சனியின் சந்திரனான டைட்னில் (Titan) நச்சுத் தன்மையுள்ள சயனைட் உள்ளது. ஏன் பூமியின் சந்திரனில் கூட தூசிகள் உள்ளடக்கிய மேகங்கள் உண்டு.”

“ அடேயப்பா, மற்றைய கிரகங்களில் உள்ள மேகங்களைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறாய் போலத் தெரிகிறது.”

“அது சரி உன் மனைவிக்குப் பிறக்கப் போகும் பிள்ளைக்கு என் பெயர் வைக்கப் போகிறாய்?

“ஆண் குழந்தை தான் பிறக்கும் என வைத்தியர்கள் சொன்னபடியால் உன்னோடு; கதைத்தபின், முகிலன் எனப் பெயர் வைக்க இருக்கிறேன். “

“நல்லது “முகிலன்” பிறக்கும் போது நாம் இ;டி என்ற வாத்தியம் வாசித்து மின்னல் என்ற ஒளி வெளிச்சத்தில் மழை என்ற பூமாரி பொழிந்து வாழ்த்துவோம். “

*******

எழுதியவர் : பொன். குலேந்திரன் -கனடா (3-Oct-16, 7:51 pm)
பார்வை : 707

மேலே