ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
பதமான சொற்கள் பரவசம் தந்து
விதவிதமாய்ப் பாடல்கள் விந்தையாக என்று
முதவுகின்ற யாப்பு முவப்பிலாப் பந்தம்
நிதமுமாய் வாழ்வினில் நின்று .
பொருள் :-
பதமான சொற்கள் பரவசம் தருவதால் என்றும் விதவிதமாய்ப் பாக்கள் விந்தையாய் நானெழுத உவப்பிலா பந்தமாய் உதவுகின்றது யாப்பிலக்கணம் . இத்தகைய யாப்பு என் வாழ்வில் நிதமும் நிற்க வேண்டும் என்பது பொருள் .