ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே...!
ஞாபகம் வருதே.....!

மறக்க முடியாத நினைவுகளை
சுமந்து கொண்டு மன்றாடுகிறேன் மனதில்...

அதை இறக்கி வைக்க மனமில்லாமல்...
கிரங்கி போகிறேன்...

ஞாபகம் வருதே...
டவுசர் போட்டு கொண்டு.,
அப்பாவின் வண்டியில் ரவுண்டு
ஆனந்தமாய் முன் நின்றபடி..

ஹா ஹா ஹா ஹா....!
ஒரு ரவுண்டு தான் ஆனால் உலகை சுற்றி வந்த உவகை
என் பிஞ்சு நெஞ்சிலே...

இப்படி எத்தனை முறை
இவ்வையத்தை வலம் வந்தேனோ...!

ஹா ஹா ஹா ஹா....!

ஆஹா...! ஆஹா...!

ஆனந்த கூத்தாட்டம் நடக்குதே-அதில்...
அங்கங்கே அந்திமழை பொழியுதே..

ஞாபகம் வருதே....!

பச்சிளம் பூவாய்...
தவளும் என் தமயன் என்னை
உதைத்ததாக என்னி ...
உதைத்த கால்களை முறித்திட
முயன்ற நாட்களும் ....
ஞாபகம் வருதே...!

எனக்குள் என்றும் ஓர் கள்ளன்
மறைந்து கிடப்பான்....
என் தம்பி புட்டி பால் அருந்தும் போது மட்டும்.,
அவன் வெளிவருவான்...

ஹா ஹா ஹா ஹா...!

அன்புடன் .,
- மோகன் சிவா.

எழுதியவர் : மோகன் சிவா (4-Oct-16, 11:42 am)
பார்வை : 126

மேலே