மானுடம் வெல்லும்
மானுடம் வெல்லும்! மானுடம் வெல்லும்!
நிச்சயம் ஒர்நாள் மானுடம் வெல்லும்!
மானுடம் என்பது மதியில் இல்லை;
ஆன்மா எனும் அறையின் இடுக்கில்.
விஞ்ஞானம் என்பது மக்களுக்காக;
மெய்ஞான மானுடம் மக்களை காக்க.
இதயம் என்பது இயந்திரமல்ல,
ஈரமெனும் மானுடம் நீக்க;
இதயம்தனிலே ஈரம்நீக்கி
முப்பதுவயதில் மாரடைப்புடனே.
மனிதனில் என்றும் பேதம் இல்லை.
மானுடமென்பது வெருஞ்சொல் அல்ல.
உயிரினம் தோன்றிய தொற்றை செல்லில்.
நாமெலாம் வானின் ஒற்றை குடையில்.
முப்பால் தந்த வள்ளுவன் வாக்கில்,
மானுடம் போற்றும் நீதியை கற்பீர்.
அன்னை தராசா கருனை சிறிப்பில்,
உலகை வெல்லும் மாற்கம் அறிவீர்.
இன்று பிறந்த குழந்தை போல,
நம் கண்ணிலும் மனிதம் காண்போம்.
மானுடம் போற்றுவோம்! மானுடம் போற்றுவோம்!
இப்பூவுலகிள் மனிதகுளம் உய்ய
மான்புடனே, மானுடம் போற்றுவோம்!
குறிப்பு:
உயிரினம் தோன்றிய ஒற்றை செல்லில் - (Charls Darwin Evolution Theory )