பாசத்தண்டனை

பெண்ணாகிய மலரொன்று...
மலர்ந்ததா ! மடிந்ததா !
மனமெங்கும் மகிழ்ச்சியில்லை..
மணமுடித்தவனும் அருகில் இல்லை.
விழியிரண்டும் இங்கே இமை மூடியது..
இதயத்தினுள் இருள் சூழ்ந்ததே...
தலைக்குனிந்தேன் மூன்று முடிச்சுக்காக அந்த நொடி..
முப்பொழுதும் உன் வருகையை எதிர் நோக்கி இந்த நொடி...
மணமுடித்தும் மணவாளா உன்னோடு நானில்லை இன்று..
மனமுறிவென்று என் மனதை சிதைக்கிறாய் உன் பெற்றோரால்..
கரு சுமந்தேன்...
கரு விழியிரண்டும் உன்னை எதிர் நோக்கி..
மடி சாய்ந்திட என்னருகே நீயில்லை..
மன வருத்ததில் என் நொடி பொழுதும் நகர்கிறது..
நீ வருவாய் என்று எதிர் நோக்கிய..
என் விழி வழி வாசலும்...
ஓர் நாள் வலியாய் மாறியது...
பிரசவ வலிக்கேட்டு நீ..
பறந்து வருவாய் என...
பார்வை பாசமாய் பார்த்திட...
வரவில்லை நீயும்...
பத்து மாத சுகமிங்கே...
வரமாய் வந்தது இந்த நொடி...
அந்த நொடி என் விழி...
உன்னை தேடியே தோற்றே போனது...
புன் சிரிப்பை பார்த்திட...
எந்தன் புன்னகை மன்னன் நீயில்லையே....
கலங்குகிறேன் கன நொடியும்...
கணவனே கண்ணருகே நீயில்லையே...
உன் மகன் முகம் பார்த்திட..
வேராளாய் வந்தாயோ பாசமின்றி..
ஊரார் பலி சொல் வேண்டாமென்று
என் மனம் கேட்கவில்லை..
என் பிழை என்னவென்று தெரியவில்லை...
என் மேல் கோபமோ !
உனக்கு உரிமையுண்டு கோபப்பட..
உயிர் தந்த நம் மகன்...
என்ன செய்தான் உன்னை...
பார்த்திட தவிர்க்கிறாய்...
பாதையெங்கும் பார்வை வைத்து காத்திருக்கிறோம்....
உன் வரவிற்காக..
வேதனை வேண்டாமே...
நம் பிழையால்...
நம் பிள்ளைக்கு பாச தண்டனை...

எழுதியவர் : (4-Oct-16, 4:08 pm)
பார்வை : 55

மேலே