நான் பேச மறந்த ஞாபகங்கள்

நான் பேச மறந்த ஞாபகங்கள்
என்னுள் பல இருந்தாலும்
மண்ணுல் புதைந்தவையாகத்தான்
உள்ளது


சிற்பங்களை உருவடுத்துள்ளது
இந்த
ஞாபங்கள் நாள்தோறும் ம்
உணர்வில்லாது பயணிக்கின்றது
இன்று


பயணங்கள் தொடங்கி
பல நாட்களாகியது
பாதைகளை புற்களும்
மறைத்துவிட்டது
கண்களை இருள்
முடக்கிவிட்டது
என்ன செய்வது என்று
தெரியாமல் தவிக்கிறேன்
நான் பேச வந்த ஞாபகங்களுடன்

தாகம் மறந்து பல ஞாபகங்கள்தான்
என்னை வாட்டுகின்றது
உலகத்தின் நியதிதெரியாமல்


சத்தமின்றி தூங்கியது
அந்த காலம்
பல ஓசையின்றி தூங்காமல்
இருப்பது இந்த காலம்


பிச்சை எடுப்பவனும் கூட கௌரவமாய்
உடுக்கும் அடையிலும் அழகு உண்டு
மானிடங்கள் உடுக்கும்
ஆடையில் மானமுமில்லை என்பது
இன்றைய உண்மை


நான் பேச மறந்த
ஞாபகங்கள் கூறி
நதிகளாய் போனதுதான்
மிச்சாம் இந்த பேச்சுக்கள்


எப்போது பேசுவனே நான்
பேச மறந்த ஞாபகங்களை....?????




பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (4-Oct-16, 3:33 pm)
பார்வை : 84

மேலே