காவிரி நாடகம்
மத்திய அரசு மேளம் கொட்ட
கர்நாடக அரசு கதை எழுத
நடக்குதையா நாடகம்
நடக்குதையா நாடகம்
தமிழை சொல்லி தவித்து போன தலைவர்களெல்லாம்
தரமான வேடமணிந்து தளராத நடிப்பிலே
நடக்குதையா நாடகம்
நடக்குதையா நாடகம்
தண்ணி கேட்டு சூம்பிபோன
வற்றாத வரப்பினிலே
நடக்குதையா நாடகம்
நடக்குதையா நாடகம்