முகநூல் நட்பே

இமை மூடா இந்த நொடி...
இதயத்தில் பூத்த உறவொன்று...
முகம் பார்த்ததில்லை...
முகநூலில் நட்பானோம்...
சொல்லோசை கேட்டதில்லை...
சொல் எழுத்தில் பேசினோம் குறுஞ்செய்தியில்...
எவரென்று அறிந்திடும் முன்...
ஒன்றானோம் நட்பினுள்..
பெயர் அறிந்திடும் முன்னே..
எண்ணத்தில் பொதித்து விட்டேன் என் நட்பை..
நலம் விசாரிக்கும் உன்னை...
நானறிந்ததில்லை இன்று...
இமைத்திடும் என் விழியும்...
உன் முகம் பார்க்க என்னுள்..
ஓர் நொடி கேட்க...
முயன்று பார்த்தேன் முடியவில்லை.
முகநூலின் நட்பே...
முகில் மூடும் முழுமதியழகா நீ..
இமை திறக்கும் உன் விழியழகா..
வானவில்லின் வர்ணங்களா...
புன்னகைக்கும் பூவின் சிரிப்பழகா..
எதையென்று நான் எடுத்துக்கொள்ள..
என் எழுத்துகளை நீ நம்புகிறாய்..
என்னுள்..
முத்தமிழின் ஓர் அழகாய்...
என்னில் வடித்துக்கொண்டேன் நட்பாய்....

எழுதியவர் : (5-Oct-16, 12:00 am)
Tanglish : muganool natpe
பார்வை : 212

மேலே