ஒற்றுப்பெயர்த்தல்

இதழோடு சேர்ந்த இயல்பே அழகாம்
பதமாக ஆடவர் பாடுவார் நாளும்
அணியாக மங்கை அகத்தினை நாட
மணியாக நிற்கும் மலர் .

பொருள் -1:-

இதழோடு இதழ் இயல்பாய் சேர்வது அழகு . அவ்வழகை பதமாக ஆடவர் பாடுவர் நாளும் . மங்கைக்கு அகமே அழகு . அகத்தின் அழகுடைய மங்கையை நாடி வருவர் ஆடவர் . மலர் முகத்தை உடையவளாய் மணியாய் நிற்பாள் தலைவி என்று ஒரு பொருள் படவும்

பொருள் - 2 :-

இயல்பாய் பூவுடன் சேர்ந்த இதழ் அழகுடையது . பூவிதழ் அழகை நாள்தோறும் பதமான சொற்களில் பாடல்கள் ஆண்களும் பாடுவர் . மணத்தை உடைய பூவினை மணிமணியாய் மாலை கோர்த்து தன்னுடைய தலையில் சூடிக் கொள்வர் மங்கையர் என்று மற்றொரு பொருள் படவும் ஒற்றுப் பெயர்க்கலாம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Oct-16, 10:08 pm)
பார்வை : 56

மேலே