என் ஆறாத காயமெல்லாம் உன் அன்பால் ஆறிப்போய்விடும்......

உன் சிவந்த உதடுகள் நோகாமல்
என் நெற்றியில் உதடு பதித்து
முத்தமிட்டு விளையாடிடு...

உன் எச்சில் தோய்ந்த
ஐந்து விரல்களால்
என் நெஞ்சிலே
காதல் கவிதை எழுதிடு...

அகன்ற அழகிய விழிகளால்
எனை பார்த்து உன் வசப்படுத்திடு...

உன் தீராத குறும்பு கதைகளால்
எனை தினம் தினம்
தொல்லைப்படுத்திடு...
என் ஆறாத காயங்களும்
அதில் ஆறிப்போய் விடும் அன்பே!

எழுதியவர் : சி பிருந்தா (5-Oct-16, 1:03 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 103

மேலே