இறுதி மடல்

உந்தன் நினைவுகளை
கொண்டு
சிறகு பூட்டி.....
நிம்மதியாய்
சிறகடித்தேன்.....
இது
நிஜமில்லை
என்றறிந்து
நிலைகுலைந்து
நான்
வீழ்ந்தேன்.....!!

வாடி வீழ்வேனென்று
புரிந்தும்
வாடியபடி
மலர்வதில்லை
மலர்கள்.....
என்னைத் தேடி
நீ வந்தாலும்
வரமறந்தாலும்
எந்தன்
காத்திருப்புக்கள்
காலமெல்லாம்
தொடரும்......!!

என் உயிரில்
சரிபாதி
அல்லவே
நீ......என்னுயிரையே
நீயானபின்பு.....
கண்கள்
சிந்திய
கண்ணீரில்
கலந்து
காதலின்
ஈரம்.....!!

இந்த நிமிஷம்
வரை
இந்த இதயத்தில்
இவள்
இன்றி துடித்தது
இல்லை.....!!
சிறு கூட்டில்
பெரிய பெரிய
வலிகளை
தினம் தினம்
விதைக்கிறாய்......!!

உன் சம்மதம்
வாங்கியே
என் சந்தோசம்
உச்சம்
கொண்டேனடி......
ஒருதலையாய்
ஒதுங்கி
நின்று.....ஒவ்வொரு
நிமிஷமும்
வேதனைதான்
மிச்சமாச்சு.......!!!

எழுதியவர் : thampu (5-Oct-16, 1:26 am)
Tanglish : iruthi madal
பார்வை : 136

மேலே