எங்கே நீ எங்கே இப்போது

மரணம் தரும்
வலியினை - உன்
வருகை காணா - நாட்கள்
எனக்கு உணர்த்துதடி...!

இன்பமான வீட்டுக்குள்
அலையா விருந்தாளி போல்
துன்பம் வந்து அமர்ந்து கொண்டதே - என்
இதய கூட்டுக்குள்...?

மழைக்கு ஏங்கும் பயிரைப்போல்
இன்று மண்ணை கவ்வி
கிடக்கின்றேன் - என்
மனதை தொலைத்து தவிக்கின்றேன்...!

உன்னை காண காத்திருக்கும்
நேரம் மட்டும் - ஏன்
இந்த கடிகாரம் கூட
வேகம் குறைந்து ஓடுகிறதோ...?

மழைக்கு முன் வரும் குளிர்
காற்றை போல் - உன்
வருகைக்கு முன் வரும் தென்றல்
வீசும் போது எல்லாம் - என்
விழிகள் விரிந்து அங்கும் இங்கும்
தேடுதடி நீ வருகிறாயோ என...!!!

உன்னை எந்திட காத்திருக்கும்
இந்த சாலையை போல் - என்
விழிகளும் காத்துக்கிடக்குதடி
எங்கே நீ எங்கே இப்போது...???

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (5-Oct-16, 3:00 am)
பார்வை : 305

மேலே