எம் பேர மாத்துங்கப்பா

ஏண்டா அணில் உம் பேருக்கு என்னடா கொறச்சல். அணில்-ங்கற உம் பேரு ரொம்ப அழகான பேருடா.
@@@@@@
இல்லப்பா என்னோட வகுப்பு தோழர்கள் " என்னடா அணில் மரத்திலே ஏறாம கீழ சுத்திட்டு திரியுது"-ன்னு சொல்லறாங்க. எங்க இந்திஜி குருஜி " அணில்"-ன்னா காத்து-ன்னு அர்த்தம்- ன்னு வகுப்பிலயே சொல்லிட்டாருப்பா. அதை தெரிஞ்சதுக்கு அப்பறம் என்னப் பாக்கறபோதெல்லாம் பசங்க 'இதோட காத்து வேகமா வீசுது/அடிக்குது "-ன்னு சொல்லறாஙகப்பா.
@@@@@
அவனுக கெடக்கறானுகடா அணில்.
##@###
இல்லப்ப அவுங்க என்னக் கிண்டல் பண்ணற போது எனக்கு வெக்கத்துல தல சுத்துதப்பா. எனக்கு வேற பேர வையுங்க புதுசா எதாவது நல்ல பேரா வையுங்கப்பா.
#######
வேற என்ன பேர வைக்கிறதுன்னு நீயே சொல்லுடா அணில்?
####
எனக்கு ரணில்- ன்னு பேரு வச்சிருங்கப்பா.
@#####
ரணிலுக்கு அர்த்தம் தெரியாதே.
#########
அப்பா எம் வகுப்பில லதா-ன்னு மூணு பொண்ணுக இருக்கறாங்க. யாருக்குமே லதா-ன்னா (நெலத்தில, மரத்தில படர்ற கொடி-ன்னு ) என்ன அர்த்தம்னு தெரியாதுப்பா. ரணில்-ங்கற எம் பேருக்கான அர்த்தம் யாருக்கும் தெரியாதுப்பா.
@#@#@
சரிடா அணில் நீ சொல்லற மாதிரியே உம் பேர மாத்திடலாம்.
@####
என்னப்பா மறுபடியும் அணில-ன்னு சொல்லறீங்க?
@####@
சரி, கோவிச்சுக்காதடா ரணில்
#@@@##
இப்பத்தான் நீங்க எஞ் செல்ல அப்பா.
@######@@@@@@##@@@@@@@@@#
சிரிக்க அல்ல, சிந்திக்க. மொழிப்பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (6-Oct-16, 2:15 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 339

சிறந்த நகைச்சுவைகள்

மேலே