நகைச்சுவை-இதுதான் இன்றைய வாழ்க்கை

அப்பா டேய் குட்டி வீட்டு உள்ளையே அடைஞ்சு கிடைக்காதே
"ஓடி விளையாடு பாப்பா னு பாரதியார் அன்னிக்கே சொன்னாரு
தெரியுமா ?"
பையன் யாரு பா அந்த மாமா

அப்பா : மாமா இல்ல குட்டி, அவரு மஹாகவி அதாவது
இங்கிலிஷ் ல சொன்னா பெரிய பொயட்
ஸ்கூல் ல சொல்லித்தரலையா

குட்டி : இல்லப்பா ; கேள்விப்பட்டதே இல்ல

அப்பா எங்கப்பா ஓடணும்
நம்ம வீட்டுல இடம் இல்ல

வெளில போனா கார், வான், லார்ரி
எல்லாம் தொரத்தறாங்க
கிரவுண்டு பக்கத்துல இல்ல

அப்பா : உன்னை சொல்லி குத்தம் இல்ல
என்ன சொல்லி குத்தம் இல்ல
காலம் செய்த கோலம் அப்பா
நான் என்ன செய்வேன் புரியலையே

பையன் : கண் கலங்காதே அப்பா
நான் எப்படியோ ஓடிக்கிறேன் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Oct-16, 3:18 am)
பார்வை : 345

சிறந்த நகைச்சுவைகள்

மேலே