கவிதை 128 வாழ்வை ரசிப்பது

சிலம்பை உடைத்துத்தான் கண்ணகிக்கு
நியாயம் கிடைத்தது என்றாலும்
எரிந்து சிதைந்தது என்னவோ
மதுரைமக்களும் நகரமும் அன்றோ

கோபப்பட்டுத்தான் சிலநேரம் காரியங்கள்
நாமும் நடத்துகிறோம் என்றாலும்
துடித்து வாழ்வது என்னவோ
நம்குடும்பமும் உறவும் அன்றோ

தவறுயென அறிந்ததும் விலையாய்
கொடுத்தது பாண்டியமன்னன் உயிரென்றாலும்
அவனோடு தண்டிக்கப்பட்டது அப்பாவி
மக்களும் நகரமும் அன்றோ

நம்நிலை உணரும்போது நமக்கும்
விலையாவது நம்அரோக்கியம் என்றாலும்
வருந்தி கலங்குவது என்னவோ
நாம்பெற்ற செல்வங்கள் அன்றோ

கொண்டு வந்தது சிறிதே
அவல்மட்டும்தான் என்றாலும்
கண்ணபிரான் ரசித்தது என்னவோ
குசேலனின் அன்பும் பாசமுமன்றோ

கோபத்தை மட்டும் சிறிதே
நாம் கட்டுப்படுத்தினோம் என்றாலும்
வாழ்வை ரசிப்பது என்னவோ
நாமும் நம்மை சார்ந்தவரென்றோ

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (6-Oct-16, 6:59 pm)
பார்வை : 67

மேலே