நெடுந்தூரப் பயணமாய்

விழியில்லாமல் வழித்தேடி
வலியோடு என் வாழ்க்கையும் நகரும்
நான் கண்ட மனிதம்
என் விழிப்போல் மண்ணுக்குள் புதைந்து கிடைக்கும்

போகும் பாதை எல்லாம் முட்கள்
எடுத்து போட மனமிருந்தும் பார்க்க கண்ணில்லை
அவனுக்கோ கண்ணிருந்தும்
எடுத்து போட மனமில்லை

இறைவன்
என்னோடும் கண்ணோடும்
கண்ணாமூச்சி விளையாடுகிறார்
கண்ணில்லை என்பது தெரிந்தும்

ஒத்தையடி பாதையிலே
ஓரமாய் போனவளே
ஒருரூபாய் கையில் கொடுத்து
மொத்த உயிர் எடுத்தவளே...!
என்னால் தான் பக்கமுடியால
நீயாவது என்ன கொஞ்சம் பாரு
இல்லை கொஞ்சிப்பாரு

என் அன்பும் அளவில்லாம இருக்கு
என்னுள் வேதனையும் குறைவில்லாம இருக்கு
ஒரு தடவை என் பேச்சு கேளு
கலந்திடுமே உன் உயிர் மூச்சு

காலனும் காலமும் கலந்தே
என் வாழ்க்கையும் போகுதே நெடுந்தூரப் பயணமாய்....

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (6-Oct-16, 6:18 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 359

மேலே