ராமேஸ்வரம் சங்கு விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
சங்கில் அமர்ந்தபடி சித்தமுடன் வாசிக்கும்
சங்கு விநாயகனை நாம்வணங்க - எங்கும்
அணுகாது துன்பங்கள்; அன்னவனை என்றும்
அணுவள(வு) எண்ணித் துதி! 1
சங்கு விநாயகனை நாம்வணங்க சங்கடங்கள்
தங்காமல் ஓடிவிடும்; தாரணியில் - எங்கும்
நிலையான நல்வளங்கள் நம்மையே தேடி
அலையலையாய் ஓடிவரும் நம்பு! 2