அழியாத சுவடுகள் ---முஹம்மத் ஸர்பான்
மனிதன் சிந்தித்தால்
முழுமையடைவான்
நினைவில் உள்ளம்
முட்களாய் மலர்கிறது
அன்பை கொடுத்து
அன்பை இழந்தோம்
முதுமை வந்ததால்
கண்ணீர் வந்தாலும்
வியர்வை என்பர்
விதவை வாழ்க்கை
காவிரி நதியில்
செந்நீர் படலம்
இனி யமுனையில்
பிணவாடை வீசும்
பூக்களின் முகப்பில்
முட்களின் சின்னம்
இலையின் நுனியில்
தென்றலின் முகவரி
தண்டின் நிர்வாணத்தை
காக்கும் உடை இலைகள்
இல்லாத வானிலை
இருக்கும் விண்ணில்
தேடுகிறது வையகம்
காந்தியின் அஹிம்சை யாத்திரையில்
மலர்களும் தென்றலோடு போராடுகின்றன
யுத்தங்கள் நிறைந்த உலகில்
விதிகளை வெல்ல முடியாது
வண்டுகள் என் பருக்கள்
பூக்களும் ஆமோதிக்கின்றன
செய்திகளின் விற்பனை
உயிர்கள் தான் முதலீடு
மூங்கில் காடுகளும்
பாலை வனத்தில்
யாத்திரை செல்கிறது
பாயும் நதிகள்
மண்ணுக்கு சீதனம்
எழுதும் கைகள் தளர்ந்தாலும்
எழுதப்படும் மொழிகள் ஓய்வதில்லை
உள்ளம் குணமடையும்
மருத்துவம் ஆன்மிகம்
சிறு பொம்மைகள்
செதுக்கும் சிற்பியும்
சிறிதளவு கண்ணீர்
சிந்தினால் மலடிக்காய்
தோல்வியின் முனையில்
கனவுகளும் நிஜமாகிறது
முத்தங்கள் எழுதும் தொகுப்பும்
காதலின் அகராதியில் ஒரு பாகம்
தண்ணீருக்குள் விழுந்த
காற்றில்லா பந்தை போல்
கனவுகள் மரணிக்கின்றன
மாற வேண்டிய வானிலை
வானவில்லாக ரசிக்கப்படுகிறது
அவலம் நிறைந்த உலகம்
அன்பும் பிணமாய் மனதில்
விடியல் என்ற சொல்லில்
அஸ்தமனம் வாக்குரிமை
மனதில் பதிந்த நினைவுகள்
மரணம் வரை அழிவதில்லை
கஷ்டத்தில் தான் சரித்திரங்கள்
இஷ்டப்பட்டு கருத்தரிக்கின்றன
அனுபவத்தின் வேதனை
எழுத்துக்களின் பிரசவம்
மரணிக்கும் மின்மினிகள்
கனவுகளுடன் புதைகிறது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
