பேனா முனையில் பெண்மையின் துளிகள்-துளி-03

பேனா முனையில் பெண்மையின் துளிகள்

துளி....03....

ஆள் நடமாட்டம் அற்ற சாலையில்
மரங்கள் தங்கள் கண்களை மூடி
வேடிக்கை பார்க்க....
பற்றைகள் நடுவில்
பத்தினி அவளும்
மனிதன் என்ற வண்ணம் பூசிய
விலங்கு இனத்தால்
வரையறையின்றி
வேட்டையாடப்பட்டாள்...

அவள் வாழ்வோ மண்ணுக்குள்
மடிந்து போக...
மறுநாளும் வழமை போலே
விடிந்தது....
பத்திரிகைகள் எங்கும்
அவள் படங்கள் கண்ணைக்
கலங்கிட செய்தது....

உலகம் அவனை துண்டு துண்டாய்
வெட்டி போட வேண்டும் என்றது..
அகிலத்தின் பார்வையில்
அவன் காம வெறி கொண்ட
காமுகனாய் தோன்றினான்....

ஆனால் அகிலத்திற்கு தெரியுமா
அந்த பத்தினி நிம்மதியாகவே
மண்ணுக்குள் புதைந்தால்
என்பது....
அந்த காமுகன் அவள்
கண்களுக்கு மட்டும் தன் உயிர்
காக்க வந்த கடவுளாய்
தெரிந்தான் என்று....

அன்று அவள் அந்த காமுகனிடம்
சிக்கி சிதைந்து போயிருந்தாலும்
அந்த வலிகள் அவளுக்கு
புதிதல்லவே....
இந்த வலிகளை அவள் தான்
தினம் தினம்
நான்கு சுவர்களுக்குள்
அனுபவித்துக்கொண்டிருக்கிறாளே....

காட்டில் இருக்கும் விலங்குகளும்
தலை குனியும் அளவிற்கு
கொடூரமான மிருகத்திடம் அல்லவா
அவள் தினம் கழியும் ஒவ்வொரு
நொடியும் செத்துக்கொண்டு இருக்கிறாள்....

நான்கு சுவர் நடுவில் நடப்பது
யாருக்கும் தெரிவதில்லை....
நான்கு மரம் நடுவே நடப்பது
உலகத்திற்கே தெரிந்து விடுகிறது....

தனி அறைக்குள்ளே அவளின்
வாழ்வும்
தினம் தினம் உதிரத்தில் நனைகிறது
விழிகள் வெள்ளமாய் அவள் மனதினை
தினமும் நனைக்கின்றது...
இரவு பகலின்றி இதுவே
தொடர்கதை ஆகின்றது...

திருமணம் என்ற உறவு
இது போன்ற பல வன்முறைகளுக்கு
அனுமதி வழங்கி நிற்கின்றது...
இருட்டறையினுள்ளே
சத்தமின்றி பாலியல் வன்முறைகள்
நடந்திட பாலமாகவும் மாறி நிற்கின்றது....

அகிலத்தின் பார்வையில் உண்மையில்
கொடூரமான காமுகன் அவனும்
அவள் கணவன் என்ற அங்கீகாரத்தோடு
வெளியில் நடமாடுகிறான்....
இதில் சிக்கி தினம் தினம்
செத்து பிழைக்கும் பெண்மைக்கு
அந்த காமுகன் கடவுளாய் தெரிவதில்
என்ன ஆச்சரியம் வந்துவிட போகிறது.....?????


இது என் தோழியின் அக்காவின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வு...ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.அவர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்கள் கூறியதை கேட்காத அவர்கள் பெற்றோர்கள்,கணவன் என்றால் அப்பிடி தான் இருப்பான் அனுசரித்து போவது தான் ஒரு பெண்ணிற்கு அழகு என்று கூறிய அவர்கள் பெற்றோர்கள்,அவர்கள் மண்ணுக்குள் மடிந்ததும் தினம் தினம் வருந்தி கண்ணீர் வடிக்கிறார்கள்.....காலம் கடந்த கண்ணீர்....இவர்கள் மட்டுமல்ல இவர்களை போல் இன்னும் பல பெண்கள் எங்கோ ஒரு மூலையில் தினமும் செத்துப்பிழைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்....பல பாலியல் வன்கொடுமைகள் தனி அறைக்குள்ளே குழி தோண்டி புதைக்கப்பட்டு விடுகின்றன....அந்த பெண்ணின் வாழ்வும் இருட்டுக்குள்ளேயே மூழ்கிப்போகிறது.....


இதை நான் கவிதையாக எழுதவில்லை....என் உணர்வுகளை....என் மனதின் கேள்விகளை....உண்மை நிகழ்வுகளை அப்பிடியே கூறியுள்ளேன்....உங்கள் ஆதரவோடு துளிகள் தொடரும்......


-உதயசகி-

எழுதியவர் : அன்புடன் சகி (7-Oct-16, 7:48 pm)
பார்வை : 229

மேலே