முத்தமிழே
அவள் அழகின் ---
அத்தனை லட்சணங்களையும் மறக்கும் அளவுக்கு
இன்னிசையொத்த குரலை ஒலித்தால் ---
இயல் தமிழின் அவதாரங்களாய்
வர்ணனைச் சொல்லோவியங்களும்,
கண்முன் காட்சிகளாகவே நிற்கும்
கற்பனைத் திறன்மிகு கதைகளும்,
காற்றில் சுற்றி மிதக்கும்
கவிதை சிற்பங்களும் தந்தால் ---
அந்த இயலும் இசையும்
அவள் அழகுக்கு அபிநயம் போல்
நாட்டியம் ஆடினால் ---
" முத்தமிழே!" என்று அவளை
கை கூப்பி வணங்குவேன்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
