சில நாட்கள்
சில நாட்கள்
தவிப்பினில்
விட்டுச் செல்கின்றாய்.!
சில நாட்கள்
ரசிப்பினில்
விட்டுச் செல்கின்றாய்.!
சில நாட்கள்
தனிமையில்
விட்டுச் செல்கின்றாய்.!
சில நாட்கள்
துள்ளி குதிப்பினில்
விட்டுச் செல்கின்றாய்.!
சில நாட்கள்
துயரத்தில்
விட்டுச் செல்கின்றாய்.!
சில நாட்கள்
அலைச்சலில்
விட்டுச் செல்கின்றாய்.!
சில நாட்கள்
ஏக்கத்தில்
விட்டுச் செல்கின்றாய்.!
சில நாட்கள்
என்னையே
விட்டுச் செல்கின்றாய்.!
நாளும் ஏதோவொன்றில்
விட்டுச் செல்கின்றாய்
கவிதையே.!
விஜயகுமார் வேல்முருகன்