பொம்மைகள்

தலையாட்டி பொம்மை !
தகரடப்பா பொம்மை !
இலவம்பஞ்சி பொம்மை !
இதயம் கவர்ந்த பொம்மை !

விஞ்சான உலகின் விதவிதமான பொம்மை !
ஓடும் பொம்மை !
பாடும் பொம்மை !
பறக்கும் பொம்மை !
நடக்கும் பொம்மை !
பொம்மைகள் பலவிதம் !

உலகை படைத்தான் ஒருவன் !
உறக்கத்தை தொலைத்தான் அந்த இறைவன் !
பொழுது போக்க பேரண்டத்தை படைத்தான் ;
சலிப்பாய் தோணவே -
உருவங்களை படைத்தது உணர்ச்சிகளையும் கொடுத்தான் !
மரங்களை படைத்தது கனி வகையையும் கொடுத்தான் !

மகிழ்ச்சி மட்டும் மனதில் இல்லாது -
மனிதனை படைத்தான் மகிழ்ந்து நின்றான் !
சிந்திக்கும் ஆற்றலை கொஞ்சம் சிதறிவிட்டான் !
சுவாரசியம் கூடவே ;
சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு ;
நினைத்தது போல் ஆட்டுவிக்கிறான் !

அவன் விளையாட நாமன்றோ -
இறைவன் கையில் ;
பொம்மைகள் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (8-Oct-16, 7:17 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : pommaikal
பார்வை : 126

மேலே