கயல்விழி தாமரை
தேவதையே என் மனதை திருடிய தோழி எனும் காதல் தேவதையே.. உன் சின்ன நடையில் பின்னிடை தீண்ட நீண்ட நெடுங்கூந்தலில் மல்லிகை மலர் சூடிய என் பூங்கொடியே!
செம்பருத்தி பூ போல அகன்ற நெற்றியில் அழகான சிவப்பு நிற குங்குமமிட்ட என் ஆசை பருவ பவளக்கொடியே!
வண்ணமிகு வானவில்லில் கருநிறம் மட்டும் வெளிக்காட்டி வில் போன்ற வளைந்த புருவதால் என் மனதில் அம்பு எய்த என் கருநீல காந்தல் பூவே.
எய்த வில்லில் வரும் அம்பு போல சீறி பாயும் மேல் விழி அழகியே..உன் கருவிழியின் என் இதழ் நெருங்கும் நேரம் மான்போல அங்கும் இங்கும் பரவசத்தில் துள்ளி குதிக்கும் கயல்விழி கனவே!