கோவை தங்க விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

தகதக வென்றதங்க நல்விநாய கன்தாள்
அகமகிழ்ந்து பூசனைசெய் வார்க்கே - இகபர
இன்ப மளிக்கின்ற ஈசன் மகனவனே
என்றும் எனக்குத் துணை! 1

வைய நடைமுறையில் துன்பங்கள் நீங்கியே
ஐயமின்றி நல்வாழ்வு பெற்றிட - தூயவனாம்
எங்குநிறை தங்க விநாயகனைக் கும்பிடு!
தங்கிடுமே செல்வம் தகைத்து! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-16, 11:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே