தங்க விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

எங்குநிறை தங்க விநாயகனைக் கும்பிடவே
தங்கிடுமே நன்மையெலாம் தங்கம்போல் - இங்கிவனை
ஏத்திப் பணிவோர்க்கே ஏதுகுறை; பார்புகழும்
மூத்தோனை முற்றிலுமே நம்பு! 1

கந்தனின் மூத்தோனை முற்றிலுமே நம்பினோரை
எந்நாளும் கைவிடமாட் டானவன் - நந்தியாம்
தங்க விநாயகனைத் தாரணியில் உள்ளவரை
பொங்கலிட்டுப் போற்றி வணங்கு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-16, 11:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே