செஸ் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
சிந்தனை யோடுசெஸ் ஆடுகின்ற அண்ணலை
வந்தனை செய்தாலே வந்திடுமே - புந்தியொடு
நல்லறிவும், நற்குணமும்; நாளெல்லாம் நாம்மகிழ
வல்லவ னையே வணங்கு! 1
புந்தி - understanding , judgment , அறிவு
அழகாய்த் தலைவாரி அட்டணங்கா லிட்டே
எழிலாக செஸ்விளை யாடும் - எழிலார்
விநாயகனை வேண்டி வணங்கிட நல்லோன்
விநாயகன் நல்குவான் நின்று! 2