செந்நிற விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
செந்நிற நல்விநாய கன்கழலை சிந்தனையில்
எந்நாளும் வைத்திடவே என்னிறைவன் - எந்தனது
வெண்கொம்பு நாயகன் வெற்றியும் நன்மையும்
தண்ணொளியாய்த் தந்திடுவான் நம்பு! 1
வேழ முகத்தானை செந்நிற நாயகனை
தாழக் குனிந்து தலைவணங்க - சூழவந்த
தொல்லைகள் தூரவே ஓடிவிடும்; துய்யவனை
வல்லப நாயகனை வாழ்த்து! 2