உன் பார்வையில்

உன் பார்வையில்:
பூக்கள் மொட்டு விரிப்பது போல்
உன்னுடைய இமை விரிந்தன
பார்த்த நாள் முதல்
பழகிய நாள் வரை பயத்தியக்காரணானேன்
உன் பார்வையில்
நீ மார்பின் மடியில் சாய்ந்திட
சஞ்சலம் கொண்ட என் மனம்
மின்னலாய் துடிக்க
கண்ணே உன் கண்ணில் கண்ட காதலை
கல்லறையில் சென்றாலும் காதலிப்பேன்
நொடிக்கு நொடி உருவெடுக்கும்
உன் பார்வையால்
நொருங்கியதோ என் நெஞ்சம்
அணு அணுவாய் காதலித்தேன்
உன் பார்வையை கொஞ்சம்
ஆயிர விழிகளை பார்த்தேன்-ஆனால்
ஆர்வத்தை துண்டியதோ உன் விழிகள்
ஆபத்தை எதிர்கொள்ளும் என் விழிகள்
அடைகலம் தருவயா அனைத்திட வருவயா
அன்பே! உன் பார்வையால்