காதல் பிடிக்கவில்லை என்றால்
காதல் பிடிக்கவில்லை என்றால்
தலை கவிழ்ந்து கொள், அழகை ரசிக்காமல் ஒதுங்கு.
ஆனால்
வெறித்து பார்த்துகொண்டு ஏன் தான்
வேதனை கொள்கிறாயோ?
இசையை பிடிக்கவில்லை என்றால்
மௌனத்தை பூஜிக்காதே, மூச்சிரைக்கையில் கூட
ஒரு மெட்டோலிக்கும் -
மறுத்து விடாதே, மரத்தோ மரித்தோ போய் விடாதே.
சலனமும் சப்தமும் இங்கே சங்கமித்தே தீரும்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால்
தற்கொலை செய்து கொள்.
ஆனால்,
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு
தைரியம் இருந்தால் வாழ்ந்து தான் பார்க்கலாமே?
- ஆடிட்டர் செல்வமணி