கலைப்பிறை சூடிடும் காதல் அபர்ணா தெய்வீக வெண்பா
இலையும் புசியாமல் நின்றனள் அன்பில்
இலைஇணை என்றே முனிவரும் போற்றும்
கலைப்பிறை சூடிடும் காதல் அபர்ணா
சிலையாய் தவமியற்றி னாள்
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு :
தவமியற்றும் முனிவர்கள் இலையையாவது உடல் ஆதாரத்திற்காகப்
புசிப்பார்கள் . அந்த இலையையும் புசிக்காமல் இவளுக்கு தவமியற்றுவதில்
இணையில்லை என்று முனிவர்களும் வியந்து போற்றும்படி அன்பே சிவம்
என்று தவமியற்றுகிறாள் தேவி பார்வதி .
நவராத்திரி விஜய தசமி நன்னாளில் அவளை பக்தியுடன் நினைப்போம் .
பர்ணா என்றால் இலை ; அபர்ணா என்றால் இலையும் இல்லாமல் என்று
பொருள் .
அலுவலகங்களிலும் ஆன் லைனிலும் வேலைக்காக தவம் கிடக்கும்
இளைஞ / இளஞை யினர் இவளை நினையுங்கள்.தருவாள்
தினமும் கனாக் கண்டு கனாக் கண்டு திருமணம் ஆகாது மனது தவம்
கிடக்கும் மங்கையரே இந்தத் தவப் பெருமாட்டியை உள்ளன்போடு
நினையுங்கள். கைபிடிக்க ஒருவன் நிச்சயம் வருவான் .
நினைப்போம் நித்திய கல்யாணியை !