விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா.....?
உன் நிழலாக தொடர்வேனே என் மடி சாயா வருவாயா
என் வாசல் திறப்பேனே உன் சுவாசம் தருவாயா
உனை அள்ளி அணைப்பேனே என் உயிராக கலப்பாயா
என் காதல் தருவேனே எனை தீண்டிட வருவாயா....
உன் நினைவில் திளைப்பேனே எனை தேடி வருவாயா
உனை உயிராய் சுமப்பேனே என் உறவாய் வருவாயா
உன் காலடி சேர்வேனே என் கால்த்தடம் தொடர்வாயா
என் உயிரை தருவேனே எனை உன் உயிராய் ஏற்பாயோ...
உன் கண்ணீர் துடைப்பேனே எனை தாங்க வருவாயா
உன் கோபங்கள் பொறுப்பேனே என் புன்னகை தருவாயா
எனையே முழுதாய் தருவேனே என் நாணம் தருவாயா
நீயாய் நானும் மாறிடவே விண்ணைத்தாண்டி வருவாயா...??