துளித்துளி மழையாய்----முஹம்மத் ஸர்பான்

புல்லின் தரையில்
பெண்ணிலா தூக்கம்
வானின் மேகத்தில்
வெண்ணிலா ஏக்கம்

மாலை வானம்
மஞ்சள் பூசியது
உந்தன் புருவம்
கவிதை பேசியது

நீ விடுகின்ற
மூச்சுக் காற்றால்
என் கல்லறை
கருவறையாகிறது

உன் சிரிப்பில்
உடைந்த உள்ளம்
என் கண்ணீரில்
ஒட்டிக் கொண்டது

தூவும் மழையில்
குடை பிடிக்கும்
மலராய் கண்டேன்
உன் வெட்கத்தை

வெள்ளை வண்ண
பூக்களும் அழுகிறது
மகரந்தம் இறந்து
விதவையானதால்...,

தோள்கள் சுருங்கிய
வாழ்வும் ஒரு நாள்
காதலின் நினைவை
மீண்டும் பிரசவிக்கும்

தாஜ்மஹால் காதல்
அதிசயம் என்றால்
ரகசியமான நெஞ்சம்
நெய்யப்பட்ட பளிங்கல்

நிலவோடு சண்டை
செய்யும் தாரகைகள்
எம்மைக் கண்டால்
ஒற்றுமையாகின்றன

திசை மாறிய பாதை
நகரும் வாழ்க்கையும்
கண்டெடுத்தன உனையும்
எனையும் கிரகங்களாய்

கிழக்கில் தேடினேன்
எனக்குள் கண்டெடுத்தேன்
அன்பின் விழிகளில்
துளித்துளி மழையாய்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (11-Oct-16, 5:29 pm)
பார்வை : 268

மேலே