காரணமில்லாத வெறுப்பு

நண்பன் பிறந்த நாள்
சாப்பிட சென்ற இடம்
ஒரு இஸ்லாமியர்
கடை, வயிறு
நிறைய சாப்பிட்டவுடன்
சாப்பிட்ட பின்
நண்பன் சொல்கிறான்
காசு இஸ்லாமியருக்குச்
சென்றது என்று,
சாப்பிடும் இடத்தில்
சாப்பாடு வைத்தவர்
ஒரு மனிதர்
சாப்பிட்டவன்
ஒரு மனிதன்
எங்கிருந்து வந்தது மதம்?

சில மதவெறி பிடித்த
மனிதர்களால்,
காரணமில்லாத வெறுப்பு
சாதரண மனிதர்களுக்குள்.
காரணமில்லாத வெறுப்பு
அரசியல் வாதிகளின்
ஓட்டு வங்கி,
இதை களைய வேண்டிய
பொறுப்பு 'மனிதர்'களிடமே
மனிதநேயம் எனும் வடிவில்!

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (11-Oct-16, 6:06 pm)
பார்வை : 142

மேலே