ஆண்மை

கருணை பேசும் மதம்
உம்மைச்
சம்மதமின்றிப்
புணரச் சொன்னதோ?

வரலாற்றை வழிமறித்தீர்
மானுடத்தைக் கற்பழித்தீர்.

கற்பை இழந்தது
அவர்கள் அல்ல
நீங்கள்.

வெட்கப்படுகிறேன்
நானும் ஆணாய்
பிறந்ததற்காக.

தலைகுனிந்து
நிற்கிறது
ஆண்மை.

எழுதியவர் : கனவுதாசன் (11-Oct-16, 6:15 pm)
Tanglish : aanmai
பார்வை : 85

மேலே