உயிர்

நாகரிகக் கட்டுமானத்தில்
இடிந்து சிதைந்து
நொறுங்கியது வாழ்க்கை.

எந்தப் பக்கமும்
கை நீட்ட முடியாமல்
முள் மரங்கள்.

கொஞ்சுகையில் முகந்திருப்பவும்
கோபிக்கையில் எதிர்கொள்ளவுமாய்
வதைக்கிறது.

புறமொதுக்கிப் போகாமல்
படபடத்துத் தவிக்கிறது
உயிர்.

எழுதியவர் : கனவுதாசன் (11-Oct-16, 6:16 pm)
Tanglish : uyir
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே