மனதோர மழைச்சாரல்

மனதோர மழைச்சாரல் மனதிலே அழகான காதலின் நினைவுகளை இனிமையாக ஞாபகமூட்டி எனை
காற்றில் மிதக்கச் செய்கின்றதே

தொலைதூரப்பயணமாய் யாருமற்ற வீதியிலே ஓருடலாய் நாமிருவரும் இடைவெளியற்ற நெருக்கமாய் மழையினிலே நனைந்தபடி நடந்தோமே ஓர் குடையில்

மழையின் வேகம் எம் நெருக்கத்தை
கூட்டி இவ்வுலகை மறக்கச் செய்ய நீயோ இதற்கே காத்திருந்தாய் போல் என் செவ்விதழை சுவைக்க துடித்தாய்
காதலில் வேகம் ஆசையின் மோகம்
கண்களில் காமம் கொண்டவனாய்
என் இதழ்களை உன் இதழ்களால் கௌவி தேனருந்தும் வண்டானாய்

என்னை உன் அகன்ற மார்போடு கட்டியணைக்க நானோ உன் அணைப்பிலிருந்து விடுபடாது மகிழ்ச்சி கடலில் துள்ளிக்குதித்தேன்

குடையோ நழுவியது நம் கைகளில் இருந்து இன்றும் அந்த மனதோர மழைச்சாரல் என் நினைவுகளில்

சி.பிருந்தா
மட்டக்களப்பு.

எழுதியவர் : சி.பிருந்தா (11-Oct-16, 7:53 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 77

மேலே