ஹார்ட்டை எடுத்து ஜன்னல் பக்கமா தூக்கிக் கடாசிடுவேன்

இருவிகற்ப நேரிசை வெண்பாக்கள்

என்னதான் ஆத்திரம் ரொம்ப இருந்தாலும்
கன்னாபின் னானுதான் பைலட்டு - பொன்னனிடம்
சத்தம்நீ போட்டிருக்க வேண்டாமே இப்பப்பார்
பித்தம் தலைக்கே றுது! 1

என்னதான் ஆத்திரம் ரொம்ப இருந்தாலும்
கன்னாபின் னானுதான் பைலட்டு - பொன்னனிடம்
சத்தம்நீ போட்டிருக்க வேண்டாமே; இப்பப்பார்
’சொத்’னு விழப்போறோங் கீழ்! (1 அ)

கொஞ்சமாச் சும்புத்தி உங்களுக்(கு) உண்டான்னு
நெஞ்சுல கைவச்சு சொல்லுங்க - வஞ்சமின்றி;
நானதை என்துணியைக் காயவைக்க வாங்கிவச்ச
ஏனைகட்ட வைக்குங் கயிறு! 2
.
அப்பா! பிராக்ரஸு ரிப்போர்ட்ல நீங்களா
இப்பவே கையெழுத்துப் போடறிங்க; - மப்பில
போடலன்னா வீட்ல இருக்கிறதா சேட்டுகிட்ட
ஓடிப்போய் சொல்லிடவா சொல்! 3

பாட்டி எனக்கிப்ப வேலை கிடைச்சிருச்சு!
தேட்டம்தான்; ரொம்பசந்தோ சம்டாப்பா - பாட்டியை
லீவுகேட்டு லெட்ட ரெழுதி அடிக்கடி
காவு கொடுத்திடா தே! 4

சின்னஹார்ட் ஆபரேசன் தான்பயம் வேண்டாம்னு
சொன்னாக்க கேட்கணும் சும்மாநீ – என்னானு
ஆர்ப்பாட்டம் பண்ணாஉன் ஹார்ட்டைஜன்னல் பக்கமா
சார்ஜ்னு கடாசிடுவேன் பார்! 5

பலவிகற்ப பஃறொடை வெண்பாக்கள்

அப்பா! பிராக்ரஸு ரிப்போர்ட்ல நீங்களா
இப்பவே கையெழுத்துப் போடறிங்க; மப்பில
போடலேன்னா அப்ப வெளியில தேடிவந்த
கேடி கடங்காரங் கிட்டயிங்க வீட்ல
இருக்கிறதா சொல்லிடவா சொல்! 1

சின்னஹார்ட் ஆபரேசன் தான்பயப்ட வேண்டாம்னு
சொன்னாக்க கேட்கணும் சும்மாநீ – என்னானு
ஆர்ப்பாட்டம் பண்ணா எனக்குக்கோ பம்வந்து
ஹார்ட்டை எடுத்துஜன்னல் பக்கமா – சார்ஜ்னுநான்
தூக்கிக் கடாசிடுவேன் நல்லாத் தெரிஞ்சுக்கோ!
ஜாக்கிரதை; கேள்நீ சமர்த்து! 2

ஆதாரம்: ஆனந்த விகடன் ஜோக்ஸ், நவம்பர் 30, 2011

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-16, 10:00 pm)
பார்வை : 147

மேலே