காதலுக்குள் உயிரை வைத்தால்

அன்பு தீயில் விரலை வைத்து
கல்வியில் கல்லை போட்டு
கரையோரம் சென்று காதலிக்கும்
கள்வர்களை கண்டால்
மனதிலும் சுடும் அவர்களின் செயலால்...!

அன்னையின் அன்பு உருகும் நேரத்தில்
அழகியின் நினைவுகள் கள்ளத்தனமாக மலரும்...!
அந்திமாலையில் அன்பானவளின் அழகை அளவோடு
அன்னையிடம் சொன்னால் அவள் கண்களும் மிளிரும்...!

காதலில் காத்திருக்கும் நேரம் காதலிக்கும் நேரத்தைவிட
அழகானது என அவள் இல்லாதபோது உணர்ந்தது
இன்று உண்மையில் என்னருகில் அவள் இல்லை என்றால்
அழகான நேரமும் என் அழுகையானது...!

காலனும் காதலியும் நெருங்கிய உறவினர்களோ
சம்மதித்தவுடம் காலனை தூது அனுப்புகிறாள்
என் காலன் விடுதூது...!

தீக்குள் விரலை வைத்தால் என்ன
அவள் காதலுக்குள் உயிரை வைத்தால் என்ன
இறுதியில் சுடுவது என் மனமும் உயிரும் தானே...!
================================
பிரியமுடன்,
J K பாலாஜி

எழுதியவர் : J K பாலாஜி (15-Oct-16, 4:11 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 408

மேலே