கலாம்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்னை பூமி தந்த
ஆதவன் தாம்...!!!
இளைஞனுள் நுழைந்து
ஈர்ப்பினை தந்தவர் தாம்...!!!
உறைந்திருந்த மனிதனை உயிர்ப்பித்து
ஊனத்தை நீக்கியவர் தாம்...!!!
எண்ணங்களை எழுச்சியுற செய்து
ஏணியாய் நின்றவர் தாம்...!!!
ஐயம் தந்த நாடுகளை ஆராய்ச்சியால் வீழ்த்தியவர் தாம்...!!!
ஒருமைபாட்டின்
ஓவியம் தாம்...!!!
கனவென்னும் விதை விதைத்த
காலம் தந்த நாயகனே, தமக்கு வாழ்த்து சொல்வதில் பெருமையுருகிறேன்...!!!
இளைஞனே,
கலாமின் கனவினை கடமையாய் செய்வோம் வா...!!!