உறவுகளும் தடைகளும்

உறவுகளும் தடைகளும்

புதிது புதிதாய்
சில குழப்பங்கள்
என்றுமே இல்லாத
சில திருப்பங்கள்

பழைய உறவுகள்
சருகுகளாய் உதிர
புதிய தளிர்கள்
முளைவிடுகின்றன..

தேங்கிய நிலை
மீண்டும் தொடங்க
வாடிக்கையான இவைகளை
வேடிக்கை பார்த்தபடியே

கடந்து செல்லும்
தீரம் வந்து
வெகுநாட்கள் ஆயிற்று..

தடைகள் விருப்பம்
கொண்டு தாழ்ந்துவர
நானும் விருப்பமுடன்
பயணிக்கிறேன்..

- வைஷ்ணவதேவி


Close (X)

18 (4.5)
  

மேலே