அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்

நாம் எல்லோருமே
பிரம்மனின் படைப்புகள், எனினும்
அறிவிலும் அழகிலும் எத்தனை
ஏற்றத்தாழ்வுகள்..!

சரியான ஜொள்ளு பார்ட்டி என்று
நம்மில் சிலரை சிலர் ஏசுவது
அர்த்தமில்லாத ஆணவப்பேச்சு.

அக்ரகாரத்தில் தான் அந்த காலத்தில்
அறிவு அதிகாரம் செய்தது,
(ஏன் அழகும் கூடத்தான்..)

காலமாற்றத்தில் பெரும்பான்மை சமூகம்
இன்னும் அறிவுடன் அழகுடன்
மெருகேறுகிறது, ஏனெனில்

அறிவு மதிக்கப்பட மதிக்கப்பட
ஞானம் எங்கும் பரவுகிறது;

அழகு ரசிக்கப்பட ரசிக்கப்பட
அடுத்த ஜனனத்தில் மீண்டும்
பிறந்து ஆராதிக்கப்படுகிறது,

அழகை ரசியுங்கள்,
ஆராதியுங்கள்,
இன்னும் நீங்கள் அழகாக
இந்த பிறவியிலும்
இன்னுமோர் பிறவியிலும்.

ஒழுக்கமாயிருந்தால், எதுவும் தவறில்லை,
கட்டுப்பாட்டுடன் இருக்கும்போது
ரசிகனின் ரசனை இயற்கையானது.

அறிவில் இருள் விலகுவது போல்
அழகில் அமைதி கிடைக்கும், ஏனெனில்
அது இறை வடிவம்.

பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள்
குரங்குத்தனமில்லாமல்
கும்பிடச்சொல்லுங்கள்.

அப்போது தான் இந்த சமூகம்
இன்னும் அழகுறும், அமைதி பெறும்,,,!
இல்லையெனில் இன்னும் கெடும்.

எழுதியவர் : செல்வமணி (15-Oct-16, 8:35 pm)
பார்வை : 241

மேலே