மூக்கும் முழியும்

சிலையின் கலையும்
வதனத்தில் பொழியும்

சிங்கார சித்திரம்
சித்தத்தில் நிலையும்

மஞ்சத்தின் பாவனை
நெஞ்சத்தில் குழையும்

செந்நெல்லின் கூர்மை
வெண்விழியில் அழியும்

முரடனை வெல்லும்
மூக்கும் முழியும்

இருதய உள்ளல்
விழிகளில் விளையும்

ஊடல் பொழுதில்
வார்த்தைகள் தொலையும்

மாலை நேர மகர கண்ணில
மதுரம் சொட்ட கவிதை வழியும்

நெஞ்சம் கொஞ்சம்
மஞ்சம் கெஞ்சும்

ஆசை மோதலில்
இன்பமே மிஞ்சும்

எஞ்சும் வாழ்வில்
தஞ்சம் என்னோடென்றாயின்
நேருமா வாழ்வில்
அன்பு பஞ்சம்..

எழுதியவர் : அர்ஷத் (16-Oct-16, 11:57 am)
பார்வை : 107

மேலே