குழந்தை
உன் ஒற்றை விழி பார்வை
அதை வேண்டி தினம்
சூரியனும் யாத்திரை ....
உன் பிஞ்சு விரல் சுமந்த
திருவாய் அம்மா
என்று அழைத்து மலர்வாய் ....
உன் கண்கள் சிந்தும்
மழைத்துளி
அது மட்டும் வேண்டாம் ....
உன் கன்னத்தின் குழி
அதில் விழுந்த நான்
எழவே விரும்பவில்லை ...
உன் உதடு ஒலிக்கும்
எந்த சொல்லும்
இனித்து போகும் ....
உன் குட்டி சிரிப்பு
அதை பார்க்கும் எவருக்கும்
தோன்றாது வெறுப்பு ....
உன் மேனி அதை
தழுவும் போது
இறைவனின் வாசம் ....